கொரோனா மருந்துகள் விற்பனையிலும் கொள்ளை..

Rs.3000 vial Remdesivir sold for Rs 12000 in TamilNadu.

தமிழகத்தில் கொரோனாவுக்கான ரெம்டெசிவர் ஊசி மருந்து கொள்ளை விலைக்கு விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.சீன வைரஸ் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் 16 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 2.40 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. இந்நிலையில், கொரோனாவை வைத்து தமிழகத்தில் பெரும் கொள்ளை நடப்பதாகப் பரவலாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, தனிமைப்படுத்தப்படும் வீடுகளுக்கு அடிக்கப்படும் தகர ஷீட் வாடகை, நோயாளிகளுக்கு உணவு போன்றவற்றில் அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் கூட்டுச் சேர்ந்து பல கோடிகளைச் சுருட்டுவதாகப் புகார்கள் எழுகின்றன.

இதற்கிடையே, கொரோனாவுக்கான ஊசி மருந்து விற்பனையிலும் பெரும் முறைகேடு நடப்பதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ரெம்டெசிவர் என்ற ஊசிமருந்து இன்னும் வெளிச் சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. தமிழக அரசே கொள்முதல் செய்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அளிக்கிறது. ஆனால், இந்த ஊசிமருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. ரெம்டெசிவர் ஒரு வயல் ரூ.3000 மற்றும் ஜிஎஸ்டி வரி சேர்த்து அளிக்கப்படுகிறது. அந்த பாட்டிலின் எம்.ஆர்.பி விலையே ரூ.5 ஆயிரம்தான். ஆனால், அதை ரூ12 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விலை வைத்து கள்ளச்சந்தையில் விற்கிறார்கள். குறிப்பாக, அதை விற்கும் ஏஜென்டுகளின் தொடர்பு எண்களை சில டாக்டர்களே அளிக்கின்றனர் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. மதுரையில் 6 வயல்களுக்கு(ஊசிமருந்து பாட்டில்) ரூ.75 ஆயிரம் விலை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கொள்கை குறித்து இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் சி.என்.ராஜா, சுகாதாரத் துறையிடம் புகார் அளித்திருக்கிறார். இந்த புகார்கள் குறித்து, மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் சிவபாலன் கூறுகையில், தற்போது இந்த ஊசி மருந்து அரசு மட்டுமே கொள்முதல் செய்து வருகிறது. எனவே, கள்ளச்சந்தையில் விற்கும் வாய்ப்பில்லை. இது வரை எங்களுக்கு ஒரு புகார் கூட வரவில்லை என்று மறுத்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.ஏற்கனவே, மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனைக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading கொரோனா மருந்துகள் விற்பனையிலும் கொள்ளை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அயோத்தி ராமர் கோயில் விழா.. கொரோனா பரிசோதனை தீவிரம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்