51 ஆண்டுகளுக்குப் பின் இடைத்தேர்தலை சந்திக்கும் கன்னியாகுமரி ...!

Kanyakumari to face by-elections after 51 years ...!

கடந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் திரு எச்‌.வசந்தகுமார். அவர் கடந்த மாதம் ஆகஸ்ட் ல் கொரோனா தொற்றின் காரணமாகச் சிகிச்சை மேற்கொண்டு பின்னர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.இந்த நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட உள்ளது .நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதி ஆனது 2008 ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பான பின்பு அது கன்னியாகுமரி தொகுதியாக பிரிக்கப்பட்டது ‌.

1951 ல் காங்கிரஸ் சார்பில் ஏ.நேசமணி என்பவர் வெற்றிபெற்றார். பின்னர் மீண்டும் 1967 ல் நடைபெற்ற தேர்தலிலும் ஏ.நேசமணி அவர்களே மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார்.பின்னர் அவரின் மறைவிற்குப் பின் 1969 ல் முதல் முறையாக நாகர்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது . இதில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பாகக் காமராசர் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.பின்னர் இங்கு இடைத்தேர்தலே நடைபெறவில்லை இந்த நிலையில் 2008 ல் தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்றத் தொகுதியாக மாற்றப்பட்டது.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியானது 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.கன்னியாகுமரி,நாகர்கோவில்,குளச்சல்,பத்மநாபபுரம்,விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.இந்த நிலையில் 51 ஆண்டுகள் கழித்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

You'r reading 51 ஆண்டுகளுக்குப் பின் இடைத்தேர்தலை சந்திக்கும் கன்னியாகுமரி ...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கல்யாணத்தை உதறிய நடிகையை விடாது துரத்தும் காதல்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்