15 % முதல் 18 % வரை மானியம் - தொழில் நிறுவனங்களுக்காக எடப்பாடி வெளியிட்டிருக்கும் புதிய தொழில் கொள்கை...!

15% to 18% subsidy - Edappadi has released a new business policy

15 % முதல் 18 % வரை மானியம் - தொழில் நிறுவனங்களுக்காக எடப்பாடி வெளியிட்டிருக்கும் புதிய தொழில் கொள்கை...!

புதிய தொழில் கொள்கை - தமிழ்நாடு

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவின் தாக்கம் ஆரம்பித்த நாளிலிருந்து பல்வேறு தொழில்கள் முடக்கம் அடைந்த நிலையில் பொருளாதார ரீதியாக பல நெருக்கடிகளை மாநில மற்றும் மத்திய அரசுகள் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு ஒரு புறம் இருந்தாலும், கடந்த 5 மாதங்களில் நாட்டிலேயே அதிகளவு முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்துவருகிறது.

5 மாதத்தில் 41 நிறுவனங்களோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 30ஆயிரத்து 664 கோடி முதலீடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 15 % முதல் 18 % வரை மானியம் வழங்கப்படும்.

கோவை, கடலூர், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், ராணிப்பேட்டை, சேலம், திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், நீலகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் 20 % முதல் 24 % மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading 15 % முதல் 18 % வரை மானியம் - தொழில் நிறுவனங்களுக்காக எடப்பாடி வெளியிட்டிருக்கும் புதிய தொழில் கொள்கை...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேசிய கண்தான நாள்.. கண்தானம் அளித்தார் முதல்வர் எடப்பாடி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்