பழனி கோவில் டெண்டர் ரத்து நீதிபதியின் உத்தரவிற்கு ஐகோர்ட் பெஞ்ச் தடை..!

stay order for pazhani murugan temple tender.high court bench relax the stay

பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக நிர்வாக அதிகாரியான டி.ஆர். ரமேஷ் சமீபத்தில் டெண்டர் ஒன்றை வெளியிட்டார். இதில் முறைக்கீடுகள் இருப்பதாகக் கூறி சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதைக் கடந்த செப்டம்பர் 22ம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி,ஜி. ஆர். சுவாமி நாதன் இந்த அறிவிப்பை வெளியிடக் கோவில் நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. அதனால் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்வதாக அறிவித்தார்.

மேலும் பழனி தண்டாயுதபாணி கோவிலில் கடந்த 9 ஆண்டுகளாக அறங்காவலர் குழு அமைக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி விரைவில் அதற்கான நடவடிக்கையை விரைவில் எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.இந்த தடையை நீக்கக் கோரி நிர்வாக அதிகாரியான டி.ஆர். ரமேஷ் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த விசாரித்த நீதிபதிகள் கே கல்யாணசுந்தரம் மற்றும் டி கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு டெண்டர் அறிவிப்பை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாக அதிகாரி அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே கல்யாணசுந்தரம் மற்றும் டி கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு செப்டம்பர் 22ம் தேதி தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.கோவில் அறங்காவலர் குழு அமைக்கப்படும் வரை கோவில் நிர்வாக அதிகாரிக்கு நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் கோவில் நிர்வாகிக்கு அதிகாரம் இல்லை எனக் கூற எந்த வித சட்ட விதிமுறைகளும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

You'r reading பழனி கோவில் டெண்டர் ரத்து நீதிபதியின் உத்தரவிற்கு ஐகோர்ட் பெஞ்ச் தடை..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குவைத்தில் பொதுப்பணித் துறையில் பணிபுரியும் வெளிநாட்டினர் அனைவருக்கும் வேலை பறிபோகிறது..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்