டிரெக்கிங் கிளப் நிர்வாகத்திடம் விசாரணை நடத்த அதுல்ய மிஸ்ரா முடிவு

குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து சென்னை மற்றும் ஈரோடு டிரெக்கிங் கிளப் நிர்வாகத்திடம் விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா முடிவு செய்துள்ளார்.

தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் கடந்த 11ம் தேதி பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது, டிரெக்கிங் சென்றிருந்த 36 பேரும் இந்த தீ விபத்தில் சிக்கினர். இதுவரையில், சம்பவ இடத்திலேயே 9 பேரும், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி 11 பேரும் என மொத்தம் 20 பேர் இதில் உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவம் அனைவரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரியான அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமனம் செய்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற அதுல்ய மிஸ்ரா போடி பகுதியில் உள்ள 32 பேரிடமும், அதிகாரிகள் 41 பேரிடமும் விசாரணை நடத்தினார். இதன் முடிவில், சென்னை மற்றும் ஈரோடு டிரெக்கிங் கிளம் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்படும் என அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும், விசாரணைக்கு பிறகு அதுல்ய மிஸ்ரா சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading டிரெக்கிங் கிளப் நிர்வாகத்திடம் விசாரணை நடத்த அதுல்ய மிஸ்ரா முடிவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பயிர்காப்பீட்டு தொகையாக ரூ.5க்கு செக்: விவசாயிகள் அதிர்ச்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்