தமிழகத்தில் மேலும் மூன்று பண்டிகை கால அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கம்

Three more festive high speed special trains in Tamil Nadu -

வரும் தீபாவளி பண்டிகையையொட்டி தென்னக ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது அதிலும் குறிப்பாகத் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு. ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.கொரானா ஊரடங்கு தளர்வுக்குப் பின் தமிழகத்தில் படிப்படியாக ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை ஒட்டி பல்வேறு சிறப்பு ரயில்களைத் தென்னக ரயில்வே இயக்க உள்ளது. இந்நிலையில் மேலும் 3 சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே இன்று அறிவித்து அதற்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

1. 06019/06020 சென்னை சென்ட்ரல் - மதுரை - சென்னை சென்ட்ரல் குளிர்சாதன அதிவிரைவு சிறப்பு வண்டி (வாரத்தில் மூன்று நாட்கள்)

சென்னையில் இருந்து - 19.10.2020
மதுரையில் இருந்து - 20.10.2020

2. 06027/06028 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் குளிர்சாதன அதிவிரைவு சிறப்பு வண்டி (செவ்வாய்க்கிழமை தவிர)

சென்னையில் இருந்து - 19.10.2020
கோயம்புத்தூரில் இருந்து - 20.10.2020

3. 02269/02270 சென்னை சென்ட்ரல் - ஹ.நிஜாமுதின் - சென்னை சென்ட்ரல் துரந்தோ அதிவிரைவு சிறப்பு வண்டி (வாரத்தில் இரண்டு நாட்கள்)

சென்னையிலிருந்து - 19.10.2020
ஹ.நிஜாமுதினில் இருந்து - 20.10.2020

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

You'r reading தமிழகத்தில் மேலும் மூன்று பண்டிகை கால அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிக வாடிக்கையாளர்கள் : ஜியோ தான் நம்பர் ஒண்ணாம்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்