தமிழகத்தில் மலிவு விலையில் வெங்காய விற்பனை துவக்கம்

onions at affordable prices sales starts In TamilNadu

வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கிலோ ரூ.100க்கு மேல் விற்பனையாவதால், பொதுமக்கள் வேதனை அடைந்தனர். இதனால் அரசே வெங்காயம் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் என அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று தெரிவித்திருந்தார். பெரிய வெங்காயம் விற்பனையை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பசுமை கடையில் ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனையை அவர் தொடங்கி வைத் தார். , முதல்கட்டமாகச் சென்னையில் பல இடங்களில் உள்ள பசுமை பண்ணை கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில், மக்களுக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்ய 150 டன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

You'r reading தமிழகத்தில் மலிவு விலையில் வெங்காய விற்பனை துவக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையின் சோகம் தீரவில்லை... பிராவோ ஊர் திரும்புகிறார்...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்