புதிய மாவட்டங்களுக்கான சட்டமன்றத் தொகுதிகள் பட்டியல் வெளியீடு...!

Publication of the list of Assembly constituencies for the new districts

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இதன்படி காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டமும், வேலூரில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டமும்,விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டமும், திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டமும் பிரிக்கப்பட்டன. இப்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

2021ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் , தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், வேலூர், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய எட்டு மாவட்டங்களின் கீழ் எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன என வகைப்படுத்தித் தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது.

புதிய மாவட்டங்கள் வாரியாக புதிய சட்டமன்றத் தொகுதிகள் விவரம் வருமாறு:

செங்கல்பட்டு மாவட்டத் தொகுதிகள்

சோழிங்கநல்லூர்
பல்லாவரம்
தாம்பரம்
செங்கல்பட்டு
திருப்போரூர்
செய்யூர் (தனி)
மதுராந்தகம்

ராணிப்பேட்டை மாவட்டத் தொகுதிகள்

அரக்கோணம் (தனி)
சோளிங்கர்
ராணிப்பேட்டை
ஆற்காடு

திருப்பத்தூர் மாவட்டத் தொகுதிகள்

வாணியம்பாடி
ஆம்பூர்
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர்

காஞ்சிபுரம் மாவட்டத் தொகுதிகள்

ஆலந்தூர்,
ஸ்ரீபெரும்புதூர் (தனி),
உத்திரமேரூர்,
காஞ்சிபுரம்.

வேலூர் மாவட்டத் தொகுதிகள்

காட்பாடி,
வேலூர்,
அணைக்கட்டு,
குடியாத்தம் (தனி),
கீழவைத்தியனாங்குப்பம் (தனி).

விழுப்புரம் மாவட்டத் தொகுதிகள்

செஞ்சி,
மைலம்,
திண்டிவனம் (தனி),
வானூர் (தனி),
விழுப்புரம்,
விக்கிரவாண்டி,
திருக்கோவிலூர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத் தொகுதிகள்

உளுந்தூர்பேட்டை,
ரிஷிவந்தியம்,
சங்கராபுரம்,
கள்ளக்குறிச்சி(தனி).

திருநெல்வேலி மாவட்டத் தொகுதிகள்

நெல்லை,
அம்பாசமுத்திரம்,
பாளையங்கோட்டை,
நாங்குநேரி,
ராதாபுரம்.

தென்காசி மாவட்டத் தொகுதிகள்

சங்கரன்கோவில் (தனி),
வாசுதேவநல்லூர் (தனி),
கடையநல்லூர்,
தென்காசி,
ஆலங்குளம்.

You'r reading புதிய மாவட்டங்களுக்கான சட்டமன்றத் தொகுதிகள் பட்டியல் வெளியீடு...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திண்டுக்கல் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் லஞ்ச நகை பறிமுதல்...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்