இலவச லேப்டாப்! நீட் பாடத்திட்டம்! அசத்தும் பள்ளிக்கல்வித்துறை!

Free laptop! Need Curriculum! Awesome School Education!

தமிழகத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச "லேப்டாப்" வழங்கப்பட்டு வருகிறது. அதில் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்கள் சேர்க்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை "நீட்" பாடத்திட்டங்களைச் சேர்த்து வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, 14 வகை இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தில், இரண்டு ஆண்டுகளாக பிளஸ் 1 படிக்கும் போது லேப்டாப் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு இலவச லேப்டாப்பில் பிளஸ் 2 தொடர்பான வீடியோ பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு நீட் தொடர்பான வீடியோ பாடங்களை லேப்டாப்பில் பதிவேற்றம் செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக தேர்ச்சி பெறும் வகையில், அரசின் சார்பில் இலவச நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் நீட் பயிற்சியில் நடத்தப்படும் பாடங்களை வீடியோ முறையில் தயாரித்து, இலவச லேப்டாப்பில் பதிவேற்றம் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

You'r reading இலவச லேப்டாப்! நீட் பாடத்திட்டம்! அசத்தும் பள்ளிக்கல்வித்துறை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சூர்யா படம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. டிரெண்டிங்கில் இடம் பிடித்த டிரெய்லர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்