ஆலைகளுக்கு நிலம் கையகப்படுத்துதல், தமிழக அரசின் புதிய சட்ட திருத்தம்!

ஆலைகள் விரிவாக்கத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதில் தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கான நில சீர்திருத்த சட்டத்தில் உரிய திருத்தங்களையும் அரசு மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தம் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின் படி, ஆலைகள் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்காக 120 ஏக்கர் வரை புன்செய் நிலங்களையும், 60 ஏக்கர் வரை நன்செய் நிலங்களையும் அரசின் முன் அனுமதி ஏதுமின்றி தனியாரிடம் இருந்து ஆலை நிர்வாகத்தினர் பெற்று கொள்ளலாம்.

இந்த புதிய உத்தரவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தொழில் துறை உயர் அதிகாரிகள், தொழில் ஆலைகளைத் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் நிலங்கள் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த சூழலில் அரசின் நடவடிக்கையால் அதற்கான தடைகளும், சிரமங்களும் விலகி உள்ளன எனத் தெரிவித்துள்ளனர்.

தொழில் ஆலைகள் அமைப்பதற்கு அல்லது விரிவாக்கத்திற்கு 100 ஏக்கரைத் தாண்டி நிலங்களை வாங்கும் போது அதற்கு அரசின் முன் அனுமதியைப் பெறுவது போன்ற பல்வேறு தடைகள் நடைமுறையில் இருந்தன. இப்போது அரசின் புதிய உத்தரவால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவுக்கு பலன் அடையும் என தொழில் துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

You'r reading ஆலைகளுக்கு நிலம் கையகப்படுத்துதல், தமிழக அரசின் புதிய சட்ட திருத்தம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத்திய விசாரணை அமைப்புகள் கேரள வளர்ச்சித் திட்டங்களை சீர்குலைக்க முயற்சி பினராயி விஜயன் கடும் தாக்கு.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்