பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு?

தமிழகத்தில் அரசு அறிவித்தபடி அல்லாமல் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

கொரோனா பரவல், காரணமாகக் கடந்த 7 மாதங்களுக்கு மேலாகத் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் திறக்கப்படவில்லை.பல்வேறு பள்ளி கல்லூரிகள் குறிப்பாகத் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அதேசமயம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் படவில்லை மாறாகத் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படுகிறது

தற்போது கொரோனா பரவல் வெகுவாக கட்டுக்குள் வந்ததை அடுத்து ஊரடங்கும் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் திடீரென ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.கொரோனா பரவல் மட்டுமல்லாது பருவமழையைக் கருத்தில் கொண்டும் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது

You'r reading பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிணற்றுக்குள் விழுந்த நமிதா படப்பிடிப்பை பார்க்க வந்தவர்கள் அதிர்ச்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்