மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு, தமிழக அரசு அதிரடி!

தமிழ்நாடு உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அவர்கள் பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளித்து அரசாணை பிறப்பித்துள்ளார்.

மேலும், அதில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு எலக்ட்ரிக் வாகனங்கள் கொள்கை கடந்த 2019 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி பேட்டரியில் இயங்கும் போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு வாழ்நாள் வரியில் 50 சதவீத சலுகை அளிக்கும்படி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரசுக்கு போக்குவரத்து கமிஷனர் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில், பேட்டரியில் இயங்கும் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 2022ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி வரை 100 சதவீத வரி விலக்கு அளித்து அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில், அவரது கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்து, அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் 31.12.2022 வரை வரி வசூலிக்கும் உத்தரவை நிறுத்தி வைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You'r reading மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு, தமிழக அரசு அதிரடி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 1 வருடமாக இரவில் காதலியை வீட்டுக்கு கொண்டு வந்து பலாத்காரம் பெற்றோர்களுக்கு கூட தெரியாது.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்