இராமேஸ்வரம் கோயில் நகைகளில் எடை குறைவு அர்ச்சகர்கள் ஊழியர்களுக்கு நோட்டீஸ்

இராமநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகள் குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம் உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட 65 வகையான ஆபரணங்கள் உள்ளது. கடந்த வாரம் கோவிலில் நடந்த வழக்கமான தணிக்கையின் போது நகைகள் இருப்பு மற்றும் எடை சரிபார்க்கப்பட்டது. அப்போது பெரும்பாலான நகைகளின் எடை குறைந்துள்ளதாக ஆய்வு குழு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த எடை குறைவு குறித்து கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், மணியம் மற்றும் ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு கோவில் நிர்வாகம் அபராத தொகையுடன் கூடிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து கோவில் அதிகாரிகள் மற்றும் குருக்களிடம் விசாரணை நடத்த இருப்பதாக தணிக்கை பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You'r reading இராமேஸ்வரம் கோயில் நகைகளில் எடை குறைவு அர்ச்சகர்கள் ஊழியர்களுக்கு நோட்டீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அண்ணா பல்கலைக்கு உயர் அந்தஸ்து வேண்டாம் : மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்