காஞ்சிபுரம் கோவிலில் வெறும் பல்லக்காண வெள்ளி பல்லக்கு..

ராமேஸ்வரம் கோவிலில் நகை எடை குறைந்தது போல காஞ்சிபுரம் கோவிலில் உள்ள வெள்ளிப் பல்லக்கில் இருந்து மாயமானது.

பல்லக்கில் வெறும் பலகை மட்டுமே உள்ளதாக பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்க வெள்ளி நகைகளை 3 மாதத்திற்கு ஒருமுறை, நகை சரிபார்ப்பு அலுவலர்கள் ஆய்வு செய்வது வழக்கம். அந்த ஆய்வின்போது, கோயிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட நகை, ஏற்கனவே இருப்பில் உள்ள நகை குறித்த விவரங்களை அறிக்கையாக இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு தாக்கல் செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை காணாமல் போய்விட்டது. நகை சரிபார்ப்பு அலுவலர்கள், ஆய்வு பணிக்கு செல்வதில்லை. அறிக்கையை அளிப்பது இல்லை அதிகாரிகளும் அது பற்றி கேட்பதில்லை.

இது தொடர்பாக புகார் வந்தால் மட்டுமே ஆய்வு செய்கின்றனர். இந்தநிலையில் ராமேஸ்வரம் கோவிலில் உள்ள நகைகளின் எடை குறைந்து காணப்பட்டது மதிப்பீட்டின் போது தெரியவந்தது. இதேபோல், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக திருக்கோயிலின் வைர, வைடூரிய நகைகள் திருடு போனது, வெள்ளிப் பொருள்கள் மாயமானது குறித்தும், முறைகேடுகள் பற்றியும் பக்தர்கள் அறநிலைய துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். அங்கு உள்ள வெள்ளி பல்லக்கில் வெள்ளி மாயமாகி வெறும் பலகை மட்டுமே உள்ளதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள நகைகளை, நகை சரிபார்ப்பு அலுவலர்கள் சரிபார்ப்புப் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இதே கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு குறித்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

You'r reading காஞ்சிபுரம் கோவிலில் வெறும் பல்லக்காண வெள்ளி பல்லக்கு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹீரோயின்கள் மொழி கற்க வாத்தியார்கள் நியமனம்.. இயக்குனர் ஏற்பாடு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்