எட்டு மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்திற்கு பேருந்து போக்குவரத்து இயக்கம்

தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள் மாநில எல்லையான ஜுஜுவாடி வரை நகரப் பேருந்துகளில் சென்று அங்கிருந்து கர்நாடக மாநில பேருந்துகளில் சென்று வந்தனர்.தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் பயணிகளின் நலன் கருதி இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து நேற்று இரவு 7 மணி முதல் துவங்கியது .கொரானா ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு பேருந்துகள் இயக்கப் பட்ட போதிலும் அண்டை மாநிலங்களுக்கு நேரடி போக்குவரத்து அனுமதிக்கப்படாமல் இருந்தது. தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள் மாநில எல்லையான ஜுஜுவாடி வரை நகரப் பேருந்துகளில் சென்று அங்கிருந்து கர்நாடக மாநில பேருந்துகளில் சென்று வந்தனர்.இதனால் சுமைகள் மற்றும் குழந்தைகளுடன் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

நேற்று இரவு முதல் ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கு நேரடி பேருந்துகள் இயக்கப்பட்டன. இரு மாநிலங்களுக்கிடையே அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் மற்ற மாவட்டத்திலிருந்து வரும் பயணிகள் சிரமமின்றி சென்று வருகின்றனர்.தொடர்ந்து எல்லா மாநிலங்களுக்கும் இது போல் நேரடி பேருந்துகளை இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

You'r reading எட்டு மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்திற்கு பேருந்து போக்குவரத்து இயக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆவின் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்