குற்றாலத்தில் தடை தொடரும் : ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா அனுமதிக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார். தென்காசி மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் சமீரன் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்ததித்த மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியதாவது, தென்காசி மாவட்டம் வளர்ந்து வரக்கூடிய மாவட்டமாகும். எனவே தமிழக அரசின் சார்பில் அதிக பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று மாவட்டத்தில் வெகுவாகக் குறைந்து வருகிறது.

தற்போது தினமும் பத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே கொரானா தோரற்று பாதிப்பு காரணமாக சுற்றுலாத்தலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அண்டை மாநில எல்லைக்கு அருகில் உள்ளது. எனவே தான் அங்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளிப்பது உடனடியான செய்ய கூடிய விஷயம் அல்ல. எனவே அரசு இது குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வரும் வரை குற்றாலத்தில் தடை உத்தரவு தொடரும் என தெரிவித்துள்ளார். இதனிடையே பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

You'r reading குற்றாலத்தில் தடை தொடரும் : ஆட்சியர் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பழனியில் நிலத்தகராறு காரணமாக துப்பாக்கி சூடு: இருவர் படுகாயம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்