கன்னியாகுமரி நிஜாமுதின் திருக்குறள் எக்ஸ்பிரஸ் 25ஆம் தேதி முதல் இயக்கம்

கன்னியாகுமரி - ஹ.நிஜாமுதின் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நவம்பர் 25 முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா கால ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட பின் ரயில் சேவையும் படிப்படியாக பழைய நிலையை அடைய உள்ளது. இதன்படி நாட்டின் நீண்டதூர ரயில்களில் ஒன்றான கன்னியாகுமரி - ஹ.நிஜாமுதின் இடையே திருக்குறள் அதிவேக விரைவு சிறப்பு ரயில் வரும் 25 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதற்கான கால அட்டவணையைரயில்வே வெளியிட்டுள்ளது. இதன்படி வண்டி எண் 06011/06012 கன்னியாகுமரி - ஹ.நிஜாமுதின் - கன்னியாகுமரி திருக்குறள் அதிவேக விரைவு சிறப்பு வண்டி. கன்னியாகுமரியில் இருந்து - 25.11.2020 (புதன், வெள்ளி)ஹ.நிஜாமுதினில் இருந்து - 28.11.2020 (சனி, திங்கள்) அய்ய நாட்களில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

You'r reading கன்னியாகுமரி நிஜாமுதின் திருக்குறள் எக்ஸ்பிரஸ் 25ஆம் தேதி முதல் இயக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேக்கடியில் அனைத்து படகுகளும் ஓடத் தொடங்கின.. சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்