வரலாற்றில் புதுசு... அமித் ஷாவை காத்துக்கிடந்து வரவேற்ற எடப்பாடி!

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முன்னாள் தலைவருமான அமித் ஷா இன்று தமிழகம் வந்துள்ளார். அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக அவர் வந்தாலும், பாஜகவினருடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். அதில் பாஜக தேர்தல் உத்திகளை முடிவு செய்கின்றனர். அதன்படி, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அமித் ஷா, மதியம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அமித்ஷாவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், தமிழக அமைச்சர்கள் பாஜக மூத்த, முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் நட்சத்திர விடுதிக்கு செல்லும் வழியில் காரில் இருந்து இறங்கிய அமித் ஷா சிறிது நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

பின்னர், சென்னை விமான நிலையத்தில் இருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வந்தடைந்தார் அமித் ஷா. அங்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் குழுவினருடனும் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

காத்துக்கிடந்து வரவேற்ற எடப்பாடி!

அமித் ஷா விமான நிலையம் வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பே முதல்வர் எடப்பாடி அங்கு சென்றார். அமித் ஷா வர தாமதம் ஆன நிலையில் காத்துக்கிடந்து வரவேற்றார். பொதுவாக மத்திய அமைச்சர்கள் வரும்போது தமிழக அமைச்சர்கள் வரவேற்க செல்வதே வழக்கம். ஆனால் இந்த முறை முதல்வர் எடப்பாடி நேரில் சென்று வரவேற்றது மட்டுமில்லாமல் அவருக்காக காத்தும் கிடந்தார். இது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதாகை வீச்சு!

விமான நிலையத்திற்கு வெளியே சாலையில் நடந்து தொண்டர்களை பார்த்து கையசைத்து அமித் ஷா மீது பதாகையை வீச முயன்ற நங்கநல்லூரைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். எனினும் பதாகையை வீசிய துரைராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

You'r reading வரலாற்றில் புதுசு... அமித் ஷாவை காத்துக்கிடந்து வரவேற்ற எடப்பாடி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிகில் நடிகை படம் ஒடிடியில் வெளியாகிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்