காங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் சேர்ந்தார்

வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்.

வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோகர் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராஜினாமா செய்தார் அதன்பின் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தன்னம்பிக்கை வளர்க்கும் ஒரு மையத்தை இலவசமாக நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனது ஆதரவாளர்களோடு சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ராயபுரம் மனோ வடசென்னையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட தலைவராக இருந்து காங்கிரஸ் கட்சியை வழி நடத்தி வந்தார்.

மூப்பனார், தமாக தலைவர் வாசன் ஈவிகேஎஸ் இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் ஞானதேசிகன் கோபண்ணா ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர் மனோ. காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராக அகில இந்திய உறுப்பினராக மாவட்ட தலைவராக பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார் இவரது பணியை ராகுல்காந்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழ்நாடு ஆணழகன் சங்க மாநில தலைவராகவும் உள்ளார் இவரது மையத்தில் காமராஜர் காந்தி நேரு பிறந்த நாட்கள் மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளார் இவரது மையத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டு பல்வேறு தலைவர்கள் வந்து பேசி விட்டுச் சென்றுள்ளனர்

You'r reading காங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் சேர்ந்தார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்