சென்னை பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து வெளியேற்றம்: 50 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு இளையராஜா வழக்கு

சென்னை பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து தன்னை வெளியேற்றியதற்காக 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை சாலி கிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த தன்னை ஸ்டுடியோவின் உரிமையாளர் வெறியேற்றி விட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர் தமது மனுவில் , தனக்குச் சொந்தமான பொருட்களை ஸ்டுடியோவில் வைத்திருந்ததாகவும் அதை எடுத்துச் செல்லக் கூட அனுமதிக்காமல் அவர்கள் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது எனவும், தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டூடியோவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் இது தொடர்பாக டிசம்பர் 17ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

You'r reading சென்னை பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து வெளியேற்றம்: 50 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு இளையராஜா வழக்கு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கடும் குளிர் காரணமாக முட்டை விலை உயர்வு...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்