டார்ச்லைட் சின்னம் மறுக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்ட குறுக்கீடு தான் காரணம் : கமல் பேட்டி

தங்களது கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் மறுக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்ட குறுக்கீடுதான் காரணம் என கமலஹாசன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வந்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் நடிகர் கமலஹாசன் பேட்டி: தேர்தல் ஆணையம் என்பது அனைத்து கட்சி கட்சிக்காக செயல்படக்கூடியது. எங்களுக்கு சின்னம் மறுப்பதில் ஏதோ ஒரு குறுக்கீடு இருக்கலாம் அது எந்தவிதமான குறுக்கீடு என எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படும் என நம்புகிறோம். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.

அவர்களுடைய கொள்கைகள் என்ன என்பது அவர்கள் செயல்பாடுகளை பொறுத்துதான் தெரியும் என்றார். பின்னர் கமலஹாசன் எட்டைய புரத்தில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தை பார்வையிட்டார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்: ஒவ்வொரு கட்சியும் அவர் சித்தாந்தத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் பாரதியார் அதைக் கவிதையாக சொல்லிச் சென்றார். கட்சிகள் அந்த சமூக நீதிகளை கொண்டு செல்ல தயாராக வேண்டும். இன்னும் பாரதியின் நினைவுகள் அனைவரின் நெஞ்சிலும் உள்ளது என்றார்.

You'r reading டார்ச்லைட் சின்னம் மறுக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்ட குறுக்கீடு தான் காரணம் : கமல் பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அடுத்த வருட குடியரசு தின சிறப்பு விருந்தினர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்