பாடத்திட்டங்கள் குறைப்பு: அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் 10 முதல் 12 மணி வரையிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகம் விளையாட்டுத் துறையில் இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலம் நடத்திக் கொள்ளலாம்.

பள்ளிகள் திறப்பு குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்களிடம் கருத்துக் கேட்ட பிறகே முடிவு செய்யப்படும்.9 ம் வகுப்பு வரையில் 50 சதவீத பாடத்திட்டங்களும் 10, 11,12 ம் வகுப்பிற்கு 65 சதவீதம் பாடங்கள் மட்டுமே நடத்தப்படும்.9 ம் வகுப்பு வரை 50% பாடங்களும், 10,11,12 ம் வகுப்புகளுக்கு 35 சதவீத பாடங்களும் இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

You'r reading பாடத்திட்டங்கள் குறைப்பு: அமைச்சர் பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெற்றிமாறனின் படம் ஒடிடியில் வெளியாகிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்