நானும் ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்: கமல் பேட்டி

நானும் ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் தான் பயப்படுகிறார்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கமலஹாசன் தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்த மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் தேங்காய்ப்பட்டனம் அருகே உள்ள இறையுமன்துறையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: எம்ஜிஆர் வழியில் தமிழ் ஈழத்திற்கு குரல் கொடுக்கும் தேவை வந்தால் கண்டிப்பாக குரல் கொடுப்பேன். தற்போது அந்த தேவை வந்துள்ளது. திமுகவோடு கூட்டணி குறித்து உதயநிதியுடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக வெளிவந்த தகவல் ஊடகங்களின் ஊகம் தான்.

யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றுள்ளது மக்களுக்கு நல்லது செய்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்பதின் அடையாளம். நானும் ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். ஆனால் ரசிகர்கள் சந்தோசமாக ஏற்கிறார்கள். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு முதல் முதலில் தமிழகத்தில் ஆதரவு கொடுத்த கட்சி மக்கள் நீதி மையம்தான்.

You'r reading நானும் ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்: கமல் பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கூகுள் மீட் செயலி: மேலும் 4 மொழிகளில் லைவ் கேப்ஷன் வசதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்