பொங்கல் பரிசு ரூ.2500 : முதல்வர் அதிரடி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுகளுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குக் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது இந்த ஆண்டு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பரிசுத்தொகையை உயர்த்தி அறிவித்திருக்கிறார் என்று பொது மக்களிலேயே பலராலும் இது விமர்சிக்கப்படுகிறது.

ஆனால் ஆளுங்கட்சியினரோ அப்படி அல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு 1,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் கொரானா ஊரடங்கால் பொதுமக்கள் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த தொகையை உயர்த்தி பொங்கல் நேரத்தில் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று சொல்லிச் சமாளித்து வருகிறார்கள்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ.2500 ரூபாயுடன் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, முந்திரி ஆகியவையும் வழங்கப்படும். வரும் ஜனவரி 4ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

You'r reading பொங்கல் பரிசு ரூ.2500 : முதல்வர் அதிரடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தெலங்கானாவில் நடுரோட்டில் ..டமால் டுமீல் .. மூவர் ஆஸ்பத்திரியில் ஒருவர் சிறையில்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்