இனி ஆதார் கட்டாயம், அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்!

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 2020 ல் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2021 ம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

தோட்டக்கலை துறை, விவசாய துறை, பொறியியல் துறை, கட்டுமான துறை, தொல்லியல் துறை, மீன்வள துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, கூட்டுறவு துறை, புள்ளியியல் துறை, புவியியல் துறை, சட்டத்துறை, நகர்புற மேம்பாட்டு துறை, குடிமையியல் துறை (Gr II) , தொழிற்சாலை மற்றும் வர்த்தக துறை, சிறைத்துறை, இந்து அறநிலையத்துறை, குடும்ப நல்வாழ்வு துறை, மருத்துவ துறை, நூலகத்துறை, சமூக பாதுகாப்பு துறை, காடு வளர்ப்பு துறை, சத்துணவு துறை, பள்ளிக்கல்வி துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை என கிட்டத்தட்ட 40 துறைகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை இந்த ஆண்டு வெளியிட ஆயுத்தமாக உள்ளது. எனினும் இந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தின் மூலமே தேர்வர்கள், வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

அப்படி விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், அவர்களுக்கென தனி கணக்கை தொடங்க வேண்டும். அதில் அவர்களின் விவரங்கள், கல்வி தகுதி போன்றவை உள்ளீடு செய்ய வேண்டும். இதில் தற்போது ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று தேர்வாணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆதார் எண்ணை இணைக்காத நபர்கள், தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://www.tnpsc.gov.in/

https://tamil.thesubeditor.com/media/2020/12/51_PRESS-RELEASE.pdf

You'r reading இனி ஆதார் கட்டாயம், அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்க சில டிப்ஸ்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்