ஜல்லிக்கட்டு நடத்த புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அறிவிப்பு

300 வீரர்களுக்கு மேல் பங்கு பெறக் கூடாது என்பது உள்ளிட்ட பல புதிய நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடத்தப் படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஏற்கனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் மேலும் சில நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பராமரிக்க தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த பெரு மகிழ்ச்சியோடு பங்குபெற்று வருகின்றனர்.

இந்த விளையாட்டிற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு கடந்த, 2017 முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பார்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டும் அல்லாமல், பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும். ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உடன், தற்போது கோவிட்-டி பெருந்தொற்று காரணமாக எதிர்வரும் 2021-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்தவெளியின் அளவுக்கு ஏற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பகையில் அதிகபட்சம் 50 சதவீத அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. வெப்ப பரிசோதனை (Thermal Samming) செய்த பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கோவிட் தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும், நிகழ்ச்சியில் பார்வையாளர்கணக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.

You'r reading ஜல்லிக்கட்டு நடத்த புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹாலிவுட்போல் தமிழில் சைன்ஸ் ஃபிக்ஸன் படங்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்