சீமானை கண்டித்து தேனியில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்.

சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவில் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் என ஆளாளுக்கு பிரச்சாரத்தை அங்கங்கே துவக்கி விட்டனர். இவரை தவிர நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமானும் ஆங்காங்கே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று செல்லுமிடமெல்லாம் இவர் பேசி வருகிறார்.

நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இவர், இந்த தேர்தலில் ரஜினி கமலை அடிக்கின்ற அடியில் நடிகர் விஜய் உட்பட எந்த நடிகரும் இனி அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லியிருந்தார். இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக சீமானை கண்டித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அதில் என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்போம் - அது வேற வாய். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது - இது நாற வாய் என வடிவேலு பட வசனங்களை குறிப்பிட்டு சீமானுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அரசியலின் நடிகன் சீமானே எங்கள் தளபதி பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்தன. தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தயாரான இந்த மெகா சைஸ் போஸ்டர்கள் நகரின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

You'r reading சீமானை கண்டித்து தேனியில் விஜய் ரசிகர்கள் போஸ்டர். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சூர்யாவை தொடர்ந்து ஒடிடிக்கு போன மற்றொரு ஹீரோ..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்