குரூப்-1 தேர்வில் இடம்பெற்ற பரியேறும் பெருமாள்!

தமிழக அரசு தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால் இதற்கான தேர்வை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் 2020 ன் இறுதியில் கட்டுப்பாடான தளர்வுகள் விதிக்கப்பட்ட பின், தேர்வாணையம் இந்த 2021 ம் ஆண்டின் தொடக்கத்தில், குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வானது இன்று 03-01-2021 நடைபெற்றது. பல தேர்வர்கள் இன்னும் இந்த கொரோனா பயத்தில் இருந்து வெளிவராதது, இன்றைய வருகை பதிவில் இருந்து தெரிந்த கொள்ளலாம்.

இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில், ஒரு கேள்வி மட்டும் சமூக வலைத்தளத்தில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் ஆதரவுகளையும் பெற்று வருகிறது. இன்று நடந்த குரூப்-1 தேர்வில் கடந்த 2018 செப்டம்பரில் வெளிவந்த "பரியேறும் பெருமாள்" படத்தின் சார்பான கேள்வி இடம்பெற்றுள்ளது.

இந்த கேள்வி இடம்பெற்றிருந்தாலும், இதற்குக் கொடுக்கப்பட்ட நான்கு விடைகளும் பல விமர்சனங்களையும், சாதிய அடையாளத்தையும் உச்சம் தொடவைப்பதான பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன. இது போன்ற கேள்விகள் பொது அமைப்பின் சார்பில் தேர்வுகளில் கேட்கப்பட்டால், சாதியத்தை ஆதரிப்பதாக ஆகி விடாதா? என்ற கேள்வியையும் பலர் எழுப்புகின்றனர்.

இந்த கேள்விக்குக் கொடுக்கப்பட்ட விடைகளில்
1) இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளைச் சுட்டிக்காட்டுகிறது.

2) இப்படம் மிகச்சிறந்த படம் என்ற வரிசையில் பிலிம் பேர் விருது பெற்றது.

3) இப்படம் மாரி செல்வராஜ் அவர்களால் இயக்கப்பட்டு, நீலம் குழுமத்தால் வெளியிடப்பட்டது.

மேற்காணும் கூற்றுகளில் சரியானவை எவை? என்ற கேட்கப்பட்டுள்ளது. தொகுதி -1 கேட்கப்படும் பொது அறிவு கேள்வி தானா இது ? இதற்கும் பொது அறிவிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? போன்ற பல்வேறு விமர்சனங்கள் தேர்வாணையத்தின் மீது எழும்புகிறது?

மேலும் தேர்வாணையம் எந்த பாதையை நோக்கிச் செல்கிறது? என்ற கேள்வியும் எழாமல் இல்லை ?

You'r reading குரூப்-1 தேர்வில் இடம்பெற்ற பரியேறும் பெருமாள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நிச்சயமா நீ முதல்வராக முடியாது ஸ்டாலினுக்கு அழகிரி சாபம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்