சென்னை புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு நடக்குமா?

ஆண்டுதோறும் ஜனவரி பொங்கல் திருநாளில் நடக்கும் சென்னை புத்தக காட்சி இந்த ஆண்டு நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தைப் பொங்கலை ஒட்டி சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் இந்த புத்தகக் கண்காட்சியில் எல்லா துறை சார்ந்த புத்தகங்களும் இடம். பெறும் மாநிலம் முழுவதும் இருந்து மக்கள் இந்த கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் குறுகிய காலத்தில் விற்பனையாகும் அதிசயமும் இங்கு நடக்கும்.

இந்த ஆண்டு கொரானா பெருந்தொற்றுகாரணமாக புத்தகக் கண்காட்சி நடைபெறாது எனப் புத்தகக் கண்காட்சியை நடத்தும் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் 44வது சென்னைப் புத்தகக் காட்சியை வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் நடத்த அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது . அனுமதி கிடைத்தவுடன் பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் 44ஆவது சென்னை புத்தகக் காட்சி அர்த்தப்படும். கடந்த 8 மாத காலமாக புத்தக விற்பனை இல்லாத சூழலில் பொங்கல் விடுமுறைக் காலங்களில் ஒரு சில பதிப்பாளர்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் சிறு சிறு புத்தக காட்சிகளைச் சென்னையைச் சுற்றி நடத்தி வருகிறார்கள் .

You'r reading சென்னை புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு நடக்குமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சகாயம் ரிட்டஅர்யர்டு : அடுத்தது கட்சி தானா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்