கச்சத்தீவு ஆலய திருவிழா: இரு நாட்டு பக்தர்களுக்கும் அனுமதியில்லை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு கச்சத்தீவு ஆலய திருவிழாவில் பங்கேற்க இரு நாட்டுப் பக்தர்களுக்கும் அனுமதியில்லை.கச்சத்தீவவு ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கையிலிருந்து இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. ராமேசுவரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.

ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சார்ந்த அந்தோணிப்பிள்ளை மற்றும் தொண்டியைச் சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் 1913ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது.ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை கடந்த 1974 ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தி மற்றும் இலங்கைக்கு எழுதிக் கொடுத்தார்.

அதே சமயம் கச்சத்தீவு ஒப்பந்தப்படி அங்குள்ள தேவாலயத் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்பதற்கு உரிமை உண்டு.இந்த ஆண்டு கச்சத்தீவு ஆலய திருவிழா வரும் பிப்ரவரி 26,27 தேதிகளில் நடைபெறவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு
திருவிழாவுக்கு இரு நாட்டுப் பக்தர்களுக்கும் அனுமதியில்லை.இந்தியத் துணை தூதரக அதிகாரி, நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.நெடுந்தீவு பகுதிக்கு உட்பட்ட 150 பேரை மட்டும் திருப்பணிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்.

You'r reading கச்சத்தீவு ஆலய திருவிழா: இரு நாட்டு பக்தர்களுக்கும் அனுமதியில்லை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈஸ்வரன் படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் திடீர் எதிர்ப்பு.. ஒ டி டி ரிலீஸ் என்றதால் பரபரப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்