குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு இரண்டாவது நாளாக குளிக்க தடை

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் தென்காசி குற்றாலம் செங்கோட்டை பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளப் பெருக்கு இன்று அதிகரித்ததால் அங்கு குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டாவது நாளாக நீக்கப்பட்டிருக்கிறது. மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி புலி அருவி உள்ளிட்ட எந்த அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க அனுமதியில்லை. அருவிக்கு அருகில் சென்று விடாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை சென்று வந்த ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

You'r reading குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு இரண்டாவது நாளாக குளிக்க தடை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஊரெல்லாம் ஓவியம் வரையும் மாதவன் படக்குழு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்