2021-22 மத்திய பட்ஜெட்... தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள்?!

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் 8-வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. 2021 - 2022 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய முயற்சியில் டிஜிட்டல் முறையில், நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்களில் நிர்மலா சீதாராமன் முடித்தார். பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நீதி ஒதுக்கப்பட்டது. பல்வேறு திட்டங்களும் இடம் பெற்றது. தமிழகத்திற்கும் பல்வேறு திட்டங்கள், கூடுதல் நீதி அறிவிக்கப்பட்டது.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட திட்டங்கள் பின்வருமாறு:

* சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப் பணிகளுக்காக ரூ.63,246 கோடி ஒதுக்கீடு.

* சென்னை மெட்ரோ ரயில் இத்திட்டம் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவுப்படுத்தப்படுகிறது.

* தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடியில் 3,500 கிலோ மீட்டர் சாலைப்பணிகள் நடைபெறுகிறது.

* தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 4 மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்ப்படும்.

* பொருளாதார நடவடிக்கையாக சென்னை உள்பட 5 முக்கிய மீன்பிடித்துறைமுகங்கள் விரிவுப்படுத்தப்படும்.

* தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும்.

* தமிழகத்தில் கடல் பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும்.

* தமிழ்நாடு மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் மதுரையில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலைகள் அமைக்க ஒப்புதல்.

* கன்னியாகுமரி - கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலை ஏற்படுத்தப்படும்.

* புதிய சாலைகள் 8,500 கி.மீட்டருக்குஉருவாக்க மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* சாலை திட்டங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் மத்திய பட்ஜெட் 2021-2022-ல் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.

You'r reading 2021-22 மத்திய பட்ஜெட்... தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள்?! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பட்ஜெட் 2021 - சாமானிய பார்வை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்