சேலம்: போலீசில் சிக்கினார் போலி அரசு அதிகாரி

சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பி. நாட்டா மங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தனது காரில் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி, ஈரோடு என்ற போர்டு வைத்துக்கொண்டு நான் ஈரோடு மாவட்ட டிஆர்ஓ என்றபடி வலம் வந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் சத்தியத்தை அளிக்கும் வகையில் இருந்ததால் போலீசார் சில நாட்களாக அவரை கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் அவரை கொண்டலாம்பட்டி காவல்நிலைய போலீசார், கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி மாவட்ட வருவாய் அதிகாரி என தெரியவந்தது.

இதனையடுத்து அரசு முத்திரையை தவறாகப் பயன்படுத்தியது, அரசு அதிகாரி எனக் கூறி மக்களை ஏமாற்றி வந்தது ஆகிய குற்றங்களுக்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிகாரி என்ற பெயரில் அவர் யாரையாவது ஏமாற்றினாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

You'r reading சேலம்: போலீசில் சிக்கினார் போலி அரசு அதிகாரி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடியை கொல்லத் தயார் ஐந்து கோடி தர யார் தயார்? முகநூலில் சவால் விட்டவர் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்