விதி மீறல் : 27 சாய பட்டறைகளுக்கு சீல்

ஈரோடு அருகே விதிகளை மீறி செயல்பட்ட 27 சாயப்பட்டறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகள் உள்ள கால்வாயில் கலக்கச் செய்து வந்தன. என் காரணமாக கால்வாய் நீர் இதன் காரணமாக கால்வாய் நீர் விவசாயத்திற்காக பயிர்களுக்கு பயன்படுத்த முடியாமல் இருந்து வந்தது இதுகுறித்து சமூக நல அமைப்புகளும் பொதுமக்களும் அரசுக்கு தொடர்ந்து புகார்களை அனுப்பிய வண்ணம் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அரசு அதிகாரிகளை இந்த சாயப்பட்டறைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இதில் பெரும்பாலான சாயப்பட்டறைகள் விதிகளை மீறி நிலத்தடியில் குழாய் அமைத்து திருட்டுத்தனமாக சாயக்கழிவுகளை காலிங்கராயன் கால்வாயில் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்டமாக 4 குழாய்களின் வழித்தடங்களை தோண்டி ஆய்வு செய்ததில் 27 சாயப்பட்டறைகள் சட்டத்திற்கு புறம்பாக கழிவுநீரை வெளியேற்றியது தெரியவந்தது. இதையடுத்து அந்த 27 சாய பட்டறைகளுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்..

You'r reading விதி மீறல் : 27 சாய பட்டறைகளுக்கு சீல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவு தத்தளிக்கும் இந்தியா பாலோ ஆனை தவிர்க்க போராட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்