அரசியல்வாதிகள் ஏன் கோவிட் தடுப்பூசி போடுவதில்லை? அங்கன்வாடி பணியாளர்கள் ஆவேசம்

அரசியல்வாதிகள் யாரும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போது, எங்களை மட்டும் குறிவைத்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு கட்டாயப்படுத்துவது ஏன் என அங்கன்வாடி பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.அரசு உத்தரவுப்படி தமிழகம் முழுதும் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ள போதிலும் , கரூரில், அங்கன்வாடி பணியாளர்களைத் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாவட்ட அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாக அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் சுமார் 1400 பேர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தாந்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள 140 அங்கன்வாடி பணியாளர்களை அலுவலக கூட்டம் நடப்பதாக வரவழைத்து அவர்களை வெளியே விடாமல், தடுப்பூசி போட்டுக் கொள்ள அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள்,தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்துள்ளனர். இதை ஏற்றுக் கொள்ளாத அலுவலர்கள் கட்டாயப்படுத்தியும், எழுத்துப் பூர்வமாக வேண்டாம் என எழுதிக் கொடுக்குமாறு நிர்ப்பந்தம் செய்துள்ளனர் .பதிலுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் தடுப்பூசி போட்டால் எந்த பாதிப்பும் வராது என உறுதி அளித்து எழுத்துப் பூர்வமாக அதிகாரிகள் கொடுங்கள் எனக் கேட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருகிறது. தடுப்பூசி மீது முழு நம்பிக்கை இன்னும் ஏற்படவில்லை. இதனால் பக்கவிளைவு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் அந்நாட்டு அதிபர் மற்றும் அரசியல்வாதிகள் தான் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.ஆனால், தமிழகத்தில் அரசியல்வாதிகள் யாரும் போட்டுக்கொள்ளாமல் எங்களைக் குறிவைத்து பலிகடா ஆக்க நினைக்கிறார்களா என ஆவேசப்பட்டனர்.

You'r reading அரசியல்வாதிகள் ஏன் கோவிட் தடுப்பூசி போடுவதில்லை? அங்கன்வாடி பணியாளர்கள் ஆவேசம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அனுமதியின்றி சுங்க கட்டணம் வசூல்: மதுரை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்