மெரினாவில் போராட்டம் நடத்த அய்யாகண்ணுக்கு அனுமதி மறுப்பு: சென்னை காவல்துறை

மெரினா கடற்கரையில் விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு உள்பட யாருக்கும் அனுமதி வழங்க முடியாது என்று சென்னை காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை மாநகர காவல் துறையினர் இதற்கு பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில், “மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை” என சென்னை காவல்துறை திட்டவட்டமாக பதிலளித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மெரினாவில் போராட்டம் நடத்த அய்யாகண்ணுக்கு அனுமதி மறுப்பு: சென்னை காவல்துறை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 38 ஆண்டுகளுக்கு பிறகு சவுதியில் சினிமா தியேட்டர்: முதல் படமாக ‘பிளாக் பந்தர்’ ரிலீஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்