12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ல் துவக்கம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி மே 21 வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

கொரானா தொற்று பரவல் காரணமாக முழுமையாக வகுப்புகள் நடத்தப்படாத நிலையில் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.அதே சமயம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்று அறிவிக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று காலை திடீரென தேர்வுத்துறை இயக்கம் இயக்கம் 12ஆம் வகுப்புக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி,

மே 3 மொழி பாடம்
மே 5 ஆங்கிலம்
மே 7 கணினி அறிவியல்
மே 11 இயற்பியல் பொருளாதாரம்
மே 17 கணிதம் வணிகவியல் விலங்கியல்
மே 19 உயிரியல் தாவரவியல் வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் ,வரலாறு
மே 21 வேதியியல் கணக்குப்பதிவியல் புவியியல் தேர்வு நடைபெறும். என அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ல் துவக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிரண்பேடி நீக்கம்: பட்டாசு வெடித்து காங்கிரஸ் கொண்டாட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்