முகாமில் யானை சித்திரவதை: பாகன் சஸ்பெண்ட்

யானைகள் புத்துணர்வு முகாமில் யானையை சித்திரவதை செய்ததாக விண்ணில் குமார் என்ற பாகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் சிறப்பு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெய்மால்யதாவை அதன் பாகன் விமில்குமார் என்பவர் கடுமையாக தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் யானையை தாக்கிய பாகன் மற்றும் உதவி பாகனை பணியிடை நீக்கம் செய்து இந்து அறநிலைத் துறை உத்தரவிட்டுள்ளது.

யானை சித்திரவதை தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் நேற்று மாலை கால் சங்கிலியை கழட்டிய யானை பாகனின் காலை மிதித்த தாகவும், அந்த யானை அங்கிருந்து வெளியேறி இருந்தால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தினால்தான் யானையை எச்சரிக்கும் வகையில் தாக்கியதாக அவர்கள் இருவரும் வாக்கு மூலம் அளித்துள்ளனர். இருப்பினும் தனியார் யானைகளை கொடுமைப்படுத்துதல் குற்றம் என்ற பிரிவின் கீழ் வனத்துறையினர் இதில் தலையிட்டு அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளது.

You'r reading முகாமில் யானை சித்திரவதை: பாகன் சஸ்பெண்ட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் திடீர் ராஜினாமா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்