வாக்காளர் பட்டியல் திருத்தம்: இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடியில் நடைபெற உள்ளது.தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நம்பர் 16 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டு, கடந்த ஜனவரி 20 ல் இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் புதிதாகப் பெயர் சேர்க்கவும் , பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும் , பெயர் நீக்கம் செய்யவும் இன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் , காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடக்கிறது.

01-01-2021 அன்று 18 வயது பூர்த்தியடையும் , புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்குச் சென்று படிவம்(6) ஐ பூர்த்தி செய்து தங்களை இணைத்துக் கொள்வதற்காகவும் , பெயர் நீக்கத்திற்குப் படிவம் – 7 ம், வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்குப் படிவம் 8 ம், முகவரி மாற்றத்திற்குப் படிவம் 8 A வும் , ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா எனச் சரி பார்த்துக் கொள்ளவும், இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

You'r reading வாக்காளர் பட்டியல் திருத்தம்: இன்று சிறப்பு முகாம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓ.டி.டி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்