முதல் கூட்டணி அறிவிப்பு அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தொடங்கிவிட்டது முதன் முறையாக அதிமுக கூட்டணி பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீடு உறுதிசெய்துள்ளது. இதன்படி இன்று மாலை சென்னை லீலா பேலஸில் இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது . இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் ஜிகே மணி உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே கூட்டணி குறித்துப் பேசி முடிவு செய்யப்பட்டிருந்தாலும் தேர்தல் அழிவுக்குப் பிறகு முறையாகக் கூட்டணி உதவி செய்வதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்பட்டது இதன்படி பாமகவிற்கு 23 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக சார்பில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பாமக சார்பில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.இதில் எந்தெந்த தொகைகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் கூட்டணி குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிமுக மட்டுமே.

You'r reading முதல் கூட்டணி அறிவிப்பு அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்