அய்யாத்துரையின் அசத்தல் பிளான்..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி யில் அ.ம.மு.க. வேட்பாளராக அய்யாத்துரை பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். சங்கரன் கோவிலை சேர்ந்த இவர் இன்று காலை வரை திமுகவில் மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவராக இருந்தார். தனக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப் படாததால் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். திமுகவில் தனக்கு எப்படியும் சீட்டு கிடைக்கும் என்று நினைத்து பல கோடி ரூபாய் தனது சொந்தப் பணத்தில் தொகுதி முழுக்க ஸ்டாலின் பிறந்தநாள் உதயநிதி பிறந்தநாள் என நிகழ்ச்சிகளை நடத்தி இலவசமாக அரிசி பருப்பு வேட்டி சேலைகளை வழங்கியிருந்தார்.

ஆனால் கடையநல்லூர் தொகுதி கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் உத்தரவிட கட்சிக்கு தாரைவார்த்துக் கொடுக்க தனக்கு தென்காசி அல்லது ஆலங்குளம் தொகுதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் அய்யாத்துரை பாண்டியன். ஆனால் கட்சி மேலிடம் இவரை கைகழுவி விட்டது இதையடுத்து இரண்டு பக்க கடிதம் ஒன்றை திமுக தலைவருக்கு அனுப்பி விட்டு நேராக டிடிவி தினகரனை சந்தித்து அவரது கட்சியில் ஐக்கியமானார் அடுத்த நிமிடமே அவர்தான் கடையநல்லூர் தொகுதி வேட்பாளர் என டிடிவி. தினகரன் அறிவித்துள்ளார்.

தொகுதியில் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து செல்வாக்குப் பெற்றுள்ள இவர் நாம முகாமில் போட்டியிடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை குறிப்பாக அதிமுக வேட்பாளரான மறைந்த அமைச்சர் செந்தூர் பாண்டியனின் மகன் கிருஷ்ண முரளியும் சரி திமுக கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக் வேட்பாளரான முகம்மது அபூபக்கறும் சரி.. சற்று அரண்டு தான் போயிருக்கிறார்கள்..

You'r reading அய்யாத்துரையின் அசத்தல் பிளான்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழ்நாடு டூ கேரளா: ஓடும் ரயிலில் சிக்கிய 1.22 கோடி ரூபாய்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்