`உங்ககிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கலாம்? ஆங்கிலத்தில் கேள்விகளை அடுக்கிய சிறுமிக்கு குஷ்புவின் நச் பதில்!

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக நடிகை குஷ்பு தேர்தலில் போட்டியிடுகிறார். பாஜகவில் இணைந்தபோதே இந்த முறை அவர் தேர்தலில் களம் காண்பார் என்று கூறப்பட்டது. அதற்கேற்பார் போலவே பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் குஷ்பு பெயர் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. குஷ்புவின் திறன் அறிந்த பாஜக தலைமை அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் என்பதே அந்த எதிர்பார்ப்புக்கு காரணம். அதன்படியே, பாஜக மத்திய தலைமை கொடுக்க பாஜக தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டியிடுவது உறுதியானது.

மார்ச் 18ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த குஷ்பு, அன்றிலிருந்தே ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தினசரி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் திமுக வேட்பாளருக்கு எதிராக பம்பரமாக சுழன்று வருகிறார். அதிமுக போன்ற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பிரச்சாரம் செய்து வரும் அவர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோரிடத்தில் தனது கனிவான மற்றும் அறிவான பேச்சால் முக்கியவத்துவம் பெற்று வருகிறார்.

குஷ்பு வந்தாலே அப்பகுதி மக்களும் ஆராத்தி எடுத்து வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். குஷ்புவும் மக்களின் அன்பை பெற்றுக்கொள்வதோடு, மக்கள் தெரிவிக்கும் குறைகளை தொகுத்து ஆயிரம் விளக்கு பகுதி மக்களுக்காகவே பிரத்யேக வாக்குறுதிகளையும், திட்டங்களையும் வெளியிட்டு வாக்கு சேகரித்து வருகிறார். பெண் குழந்தையின் பெயரில் ரூ.1 லட்சம் டெபாசிட், மகளிர்சுய தொழில் தொடங்க முத்ரா கடன், இஸ்லாமிய பெண்கள் வீட்டிலிருந்த படியே தொழில் செய்ய ஏற்பாடு, மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக டேப்லெட் என அவருக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை நல்ல ரெஸ்பான்ஸும் இருக்கிறது.

இதேபோல் மதம் கடந்தும் மக்கள் மத்தியில் ரீச் ஆகி வருகிறார். இஸ்லாமிய பெண்கள் ஆரத்தழுவி குஷ்புக்கு வரவேற்பு அளிக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குஷ்பு வாக்கு சேகரித்தபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஆங்கிலத்தில் அடுக்கடுக்காய் கேள்வி கேட்க, அதற்கு சளைக்கலாமல் பொறுமையுடன் குஷ்பு பதிலளிக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் சிறுமி ஒருவர், `` எங்கள் ஏரியாவிற்கு என என்ன மாதிரியான வாக்குறுதிகளை உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கலாம். தேர்தல் நேரத்தில் மட்டுமே இந்த தொகுதி எல்லாருக்கும் கண்களில் தெரிகிறது. அதன் பின் `ஆயிரம் விளக்கு தொகுதியா? அது எங்க இருக்கு' என கேட்க தொடங்கிவிடுகிறார்கள். எனவே எங்கள் பகுதிக்கு நீங்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை இப்போதே சொல்லுங்கள்" என ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார்.

சிறுமியின் கேள்விகளை சிரித்துக்கொண்டே கவனித்த குஷ்பு சிறுமியின் பாணியிலேயே பதில் கொடுத்தார். ``சுனாமி, வெள்ளம் முன்பிருந்தே என்னுடைய குழந்தைகள் இங்குள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் தான் படிக்கிறார்கள். இந்த பகுதியில் சுனாமி, வெள்ளம் போன்ற பாதிப்புகள் வந்த போது நிறைய உதவிகள் செய்துள்ளேன். ஆனால் எங்க அம்மா சொல்லியதை போல வலது கை கொடுக்குறது, இடது கைக்கு தெரியக்கூடாது என்பதற்கேற்ப நான் செய்த உதவிகள் எதையுமே பப்ளிசிட்டி செய்தது கிடையாது. சென்னை பெரு வெள்ளத்தின் போதும் இந்த பகுதி மக்கள் அனைவருக்கும் 21 நாட்கள் உணவு கொடுத்தோம். அதையும் நான் வெளியில் தெரியாமல் அமைதியாக செய்தேன்.

நான் இந்த தடவை தான் முதன் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன். மற்ற நபர்களை போல, மற்ற அரசியல்வாதிகளைப் போல தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்து செல்லமாட்டேன் என்பதை உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். உங்களுக்கு என்னிடம் கேள்வி கேட்க அனைத்து உரிமையும் உள்ளது. எனக்கு பதில் கொடுக்கும் கடைமை உள்ளது" எனக்கூறி சிறுமியை பாராட்டி சென்றார் குஷ்பு.

You'r reading `உங்ககிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கலாம்? ஆங்கிலத்தில் கேள்விகளை அடுக்கிய சிறுமிக்கு குஷ்புவின் நச் பதில்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொதுவாக காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு: தவிர்ப்பது எப்படி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்