நான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டனர் – மன்சூர் அலிகான்!

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலையில், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவருடைய இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் இதனை ஷேர் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ``என்னுடைய பேட்டிய மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்துகொண்டுள்ளார். தடுப்பூசி குறித்து எந்த உள்நோக்கத்துடனும் கருத்து தெரிவிக்கவில்லை. எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதுஎன மன்சூர் அலிகான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ``கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேன். தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading நான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டனர் – மன்சூர் அலிகான்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யாருக்கும் உதவி செய்ய முடியாத சூழலில் இருக்கிறேன்- நடிகர் சோனுசூட் அதிர்ச்சி தகவல்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்