மக்களுக்கான சிம்மாசனத்தை வடிவமைத்துக் கொண்டிதருக்கிறோம்: கமல் பேட்டி

மக்களுக்கான சிம்மாசனத்தை வடிவமைத்துக் கொண்டிதருக்கிறோம்: கமல் பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க இருப்பதாகவுமு, மக்களுக்கான சின்மாசனத்தை வடிவமைத்துக் கொண்டிருப்பதாகவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாயத்துராஜ் சட்டம் இயற்றப்பட்ட தினமான இன்று பஞ்சாயத்துராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில், கலந்துக் கொண்டு பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூட்டத்தின் முடிவில் பேசியதாவது:

கிராம சடை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டுக்கு மூன்று நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. கிராம பஞ்சாயத்துகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா என்பதே கேள்விக்குறி.

மக்களுக்கான சிம்மாசனம் உருவாகிக் கொண்டிருக்கிறது. புதிய தமிழகத்தை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மக்கள் நீதி மய்யம் மேட்டுக்குடி மக்களுக்கானது அல்ல. வரும் உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க உள்ளோம்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மக்களுக்கான சிம்மாசனத்தை வடிவமைத்துக் கொண்டிதருக்கிறோம்: கமல் பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சின்னத்திரை நடிகை மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலையா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்