அறுவை சிகிச்சைக்கு பின் வீடுதிரும்பினார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை அமைந்தரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடுதிரும்பினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சில மாதங்களுக்கு முன் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு, குடலிறக்கம் பிரச்னை இருந்தது தெரியவந்தது. அந்த சமயம் தமிழக சட்டப்பேரவைத் தோதல் பிரசாரம் தொடங்கியிருந்ததால், அவா் மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொள்ளவில்லை. மருந்து, மாத்திரிகளை மட்டும் எடுத்துக்கொண்டார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், குடலிறக்க சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியர் மருத்துவமனையில் முதலைமைச்சர் பழனிசாமி நேற்று அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனையில் எடுக்கப்பட்டது. அதில், நெகட்டிவ் என தெரியவந்ததை அடுத்து, அவர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னா் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, குடலிறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சரின் உடல் நிலை சீராக இருந்ததால், அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். மேலும் முதலமைச்சர் பழனிசாமி மூன்று நாட்கள் வீட்டில் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

You'r reading அறுவை சிகிச்சைக்கு பின் வீடுதிரும்பினார் முதலமைச்சர் பழனிசாமி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லியில் விவசாயிகள் 144 வது நாளாக போராட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்