பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு: கன்னியாகுமரி நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தலுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. எச். வசந்தகுமார் மறைவின் காரணமாக கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தற்போதைய நிலவரப்படி அங்கு வசந்தகுமாரின் மகனும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான விஜய் வசந்த் முன்னிலை பெற்றுள்ளார்.

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா வேட்பாளராக களம் கண்டார். நான்காவது சுற்றில் பொன் ராதாகிருஷ்ணன் 55,920 வாக்குகளும் விஜய் வசந்த் 90,010 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதன்படி காங்கிரஸ் வேட்பாளர் 34,090 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

கிள்ளியூர் உள்ளிட்ட சில சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது.

You'r reading பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு: கன்னியாகுமரி நிலவரம் என்ன? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழக தேர்தல்: அமைச்சர்கள் முன்னிலை, பின்னடைவு நிலவரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்