புதிய பாடத்திட்டத்தில் இசைத்தமிழர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்

பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் புதிய பாட திட்டத்தில் இரு இசை ஜாம்பவான்களான இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய இசைப்பயணம் குறித்து பாடமாக இடம்பெற்றுள்ளது.
1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு 13 ஆண்டுகளுக்கு பின் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 4ந் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டார். 
இந்த புதிய பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக, இசைத்துறையில் செய்த சாதனைகளையும் பங்களிப்பையும் கௌரவிக்கும் வகையில் 11ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'இசைத்தமிழர் இருவர்" என்ற தலைப்பில், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் பற்றிய பாடம்  இடம் பெற்றுள்ளது.
திரைத்துறை சார்ந்தவர்களாக மட்டும் இல்லாமல் இசை துறையில் சாதனை புரிந்ததற்காக இருவரின் இசை பயணங்களை பற்றிய பாடத்தில் "சிம்பொனி தமிழர்" மற்றும் "ஆஸ்கர் தமிழர்" என்று இருவரின் புகைப்படத்துடன் பாடம் இடம் பெற்றுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading புதிய பாடத்திட்டத்தில் இசைத்தமிழர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினி ரசிகர்களுக்கு நாளை சர்ப்ரைஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்