பாரதிய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது - உத்தவ் தாக்கரே

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது - உத்தவ் தாக்கரே

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பின்னர் பல்வேறு காரணங்களால் சிவசேனாவுக்கும் பாஜகவுடன் கருத்து வேறுபாடுகள் எற்பட்டன. இனி வரபோகும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியும் கிடையாது என சிவசேனா அறிவித்தது.

பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் சிவசேனா கடுமையாக விமர்ச்சித்து வந்தது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சிவசேனாவை சமாதானப்படுத்தும் முயற்சி ஈடுபட்டார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா தொடர்ந்து நீடிக்கும் என ஏப்ரல் மாதம் தெரிவித்தார்.

தற்போது, பாஜகவுடன் கூட்டணி கிடையாது. தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மராட்டிய மாநில கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவித்துள்ளன.

பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு உட்பட்ட 48 தொகுதியில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர்கள் பட்டியல் 15 நாட்களில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பாரதிய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது - உத்தவ் தாக்கரே Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வீட்டிலேயே எளிதாக செய்யலாம் ருசியான  அல்வா..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்