தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு !

தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த நிலையில், கடந்த மாதம் முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால், முன்கூட்டியே அரசு பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டன.

இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிகள் திறக்கப்படும் தேதியை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அமைச்சர் செங்கோட்டையன கூறுகையில், “புதிய பாடத்திட்டம் காரணமாக, கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது. புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால், பள்ளிகளுக்கு நாளையுடன் கோடை விடுமுறை முடியும் நிலையில், நாளை மறுநாள் (ஜூன் 1ம் தேதி) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன ” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நேரில் ஆறுதலுடன் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிய ரஜினிகாந்த் !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்