நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாக்களின் நிலை என்ன...?

நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாக்கள் நிலை

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாக்களை குடியரசு தலைவர் நிறுத்தி வைத்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வில் விலக்கு கோரி குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட இரு மசோதாக்களின் நிலை என்ன என்றும் பிற மாநில மாணவர்கள் முறைகேடாக தமிழகத்தில் சேர்க்கப்படுவதை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டிருந்தால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழக அரசு அனுப்பிய இரு சட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டதற்கான காரணம் கேட்டுள்ளோம்.

சட்ட ரீதியிலான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. வேறு மாநில மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாத அளவிற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என விளக்கம் அளித்தார்.

You'r reading நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாக்களின் நிலை என்ன...? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இமாச்சலில் கொடூரம்: அழுகிய நிலையில் பெண் சடலங்கள் மீட்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்